இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 டிசம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-12-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 20082009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கடற்படை
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(iii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபை
(v)    2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை முதலீட்டுச் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 திசெம்பர் 07 ஆம் திகதிய 2048/ 31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2017.12.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை தொடர்பான தீர்மானம்
(vii)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 திசெம்பர் 07 ஆம் திகதிய 2048/ 32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2017.12.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை தொடர்பான தீர்மானம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ கருணாரத்ன பரணவிதான                    
(ii)    கௌரவ பிமல் ரத்நாயக்க
(iii)    கௌரவ முஜிபுர் ரஹுமான்                    
(iv)    கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் 

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை முன்னறிவிப்புக்கள் தமிழில் வழங்கப்படாமை தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சூரியவெவ-மீகஹஜுன்தர பாதை விரிவாக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக 2017.11.28 அன்று ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையின் கீழ் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்கள் எழுப்பிய வினாவிற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1926 மணியளவில் பாராளுமன்றமானது 2017 டிசம்பர் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom