இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 செப்டெம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-09-06

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

(ii) 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ்  2017.07.01 முதல் 2017.07.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு

(iii) 2013 ஆம் ஆண்டுக்கான ஹோமியோபதி மருத்துவ சபை
(iv) 2015/16 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்)  சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், 2017 இறக்குமதி அனுமதிப் பத்திர மற்றும் தரப்படுத்தலும் தரக்கட்டுப்பாடும் ஒழுங்குவிதிகள் தொடர்பில், அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிய 2032/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)   கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன                   
(ii)  கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா                   
(iii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i) கௌரவ எம்.எச்.எம். சல்மான்
(ii) கௌரவ டலஸ் அழகப்பெரும
(iii) கௌரவ பிமல் ரத்நாயக்க
(iv) கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடு பற்றிய கூற்று தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

அரிசியின் கட்டுப்பாட்டு விலையினை அகற்றியதன் பின்னர் வட மாகாணம் மற்றும் நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படுகின்ற மற்றும் உள்ளூர் அரிசியின் சில்லறை விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

“சிரச” செய்தி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தவறான செய்தி அறிக்கை தொடர்பாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.


சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்

மொனராகலைத் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“மோட்டார் வாகனம் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(ii) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை


அதனையடுத்து, 1816 மணியளவில் பாராளுமன்றம் 2017 செப்டெம்பர் 07ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom