இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஆகஸ்ட் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-08-24

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபை
(iv) 2014/2015 ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2017ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டின் நிதிச் செயலாற்றுகை  பற்றிய அறிக்கை

(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்   கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பீடத்தைத் தாபித்தல்  தொடர்பில்   ஆக்கப்பட்டு, 2017 சனவரி 18 ஆம் திகதிய 2002/35 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(ii)   கௌரவ துஷார இந்துனில் அமரசேன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்

விவாதிக்கப்பட்டதுடன், நாளை (2017.08.25) வரை ஒத்திவைக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அரசாங்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நில அனுமதிப்பத்திரமுள்ளோருக்கு உரித்துறுதி வழங்கும் வேலைத்திட்டத்தினை விரிவாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1923 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom